டுபாயில் மோசடியில் ஈடுபட்ட யாழ். ஊடகவியலாளர்கள்? சிங்கள ஊடகத்திற்கு எதிராக முறைப்பாடு

Report Print Murali Murali in சமூகம்

டுபாயில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து செய்தி வெளியிட்டிருந்த சிங்கள ஊடகம் ஒன்றுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

டுபாயில் உள்ள பாதுகாப்பு நிறுவனம் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த ஆறு இளைஞர்கள் 1,198,000 டினாரை மோசடி செய்ததாக கொழும்பு ஊடகம் ஒன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.

மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் என குறிப்பிட்டு ஆறு பேரினது புகைப்படங்களையும் அந்த ஊடகம் வெளியிட்டிருந்தது.

அத்துடன், குறித்த ஆறு பேரும் தேடப்பட்டு வருவதாக அந்த ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேடப்படும் நபர் என குறிப்பிட்டு தனது புகைப்படத்தை தவறாக வெளியிட்டுள்ளமையினால் தான் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்து யாழ். ஊடகவியலாளர் ஸ்ரீராமசந்திரன் மயூதரன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.