நூதன முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்த முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பளைப் பகுதியில் நூதன முறையில் முதிரை மரக்குற்றிகளை கடத்த முயன்றவர்களை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மல்லாவியிலிருந்து மாட்டெருவுக்குள் மறைக்கப்பட்டு 4 லட்ச ரூபா பெறுமதியான முதிரை மரக்குற்றிகளை லொறியில் கடத்திச் செல்ல முற்பட்ட இருவரை பளைப் பொலிசார் கடந்த வாரம் கைது செய்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து நேற்று வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் அவர்களை ஆஜர்படுத்தியதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.