நுவரெலியா மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பயணித்த வாகனம் விபத்து

Report Print Gokulan Gokulan in சமூகம்

நுவரெலியா மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி பயணித்த கெப் வாகனம் விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியின், தலவாக்கலை சென்கிளேயர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியா மாவட்ட பிரதம சுகாதார வைத்திய அதிகாரி கெப் வாகனத்தில் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்றுள்ளார்.

இந்த நிலையில் எதிரே வந்த வாகனத்தின் முன் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டமையினால் கெப் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து கெப் வாகனம் கட்டிடமொன்றில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இருப்பினும் விபத்தில் வைத்திய அதிகாரிக்கும், சாரதிக்கும் எவ்வித பாதிப்புகளும் இல்லையெனவும், கட்டடத்திற்கும் மற்றும் கெப் வண்டிக்கும் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.