ரயில்களில் யாசகம் கேட்பவர்கள் கைது

Report Print Nivetha in சமூகம்

ரயில்களில் யாசகம் கேட்பவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் முறையற்ற வர்த்தகங்களை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிலையில், வர்த்தகர்களை கைதுசெய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாகவும் அனுர பிரேமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ரயில்களில் யாசகம் கேட்பவர்களையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.