கொழும்பில் கஞ்சா கடத்தல் : மூன்று பேர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு நாரஹென்பிட்டி தாபரே மாவத்தையில் ஒரு கிலோ கிராமுக்கும் மேற்பட்ட கஞ்சாவுடன் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கஞ்சாவை கார் ஒன்றில் எடுத்துச் சென்று கொண்டிருந்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு மாநகர சபை பெண் உறுப்பினர் ஒருவரின் உறவினரும் அடங்குவதாக நாரஹென்பிட்டி பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, சந்தேக நபர் நீண்டகாலமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.