ஹட்டனில் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

Report Print Thirumal Thirumal in சமூகம்

ஹட்டனின், பத்தனை மற்றும் சென். கிளயார் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் நேற்று இரவு மதுவரி திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றினை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் விற்பனை செய்பவர்களும், போதைபொருள் பாவனையாளர்களும் அடங்குவதாக ஹட்டன் மதுவரி திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும், திம்புள்ள, பத்தனை மற்றும் ஹட்டன் - சமனலகம பகுதியை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 640 மில்லிகிராம் ஹெரோயினும், 1500 மில்லிகிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.