படையினரின் ஏற்பாட்டில் மாணவா்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 75 மாணவா்களுக்கு படையினரின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இரணைமடு தாமரைத் தடாக மண்டபத்தில் நேற்றைய தினம் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நன்மதிப்பு நிதியத்தின் நிதி பங்களிப்பில் 57ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கிளிநொச்சி படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன கலந்து கொண்டு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்துள்ளார்.