பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு நீர் வடிகட்டும் இயந்திரம் வழங்கி வைப்பு

Report Print Gokulan Gokulan in சமூகம்

தம்பதன்னை தோட்டம் - பண்டாரஹெலிய பிரிவு பாலர் பாடசாலை சிறுவர்களுக்கு நேற்று நீர் வடிகட்டும் இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நீர் வடிகட்டு இயந்திரம் தற்போது அதிகரித்து வரும் தொற்று நோய் மற்றும் டெங்கு நோய் போன்றவற்றிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் முகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது அனைத்து பகுதிகளிலும் தொற்று நோய்கள் அதிகளவில் பரவி வருகின்றமை நாம் அறிந்த விடயமாகும். சுத்தமான நீரினை பருகாமையினால் பல்வேறுப்பட்ட தொற்று நோய்களால் சிறுவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

அதனை சீர்செய்யும் முகமாகவே பாலர் பாடசாலைகளுக்கு இந்நீர் வடிக்கட்டு இயந்திரத்தினை வழங்கும் வேலைத்திட்டத்தினை முன்னெடுத்து வருகின்றேன்.

இதுபோன்று எதிர்வரும் காலங்களிலும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை தனது அமைச்சின் மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளது என கூறியுள்ளார்.