போதைப் பொருளுக்கு அடிமையான யுவதியின் நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

ஹெரோயின் போதைப் பொருளை வாங்கிக் கொடுக்கும் எந்த இளைஞனுக்கும் பாலியல் ரீதியாக இணைய சந்தர்ப்பத்தை வழங்குவதாக கூறப்படும் 23 வயதான யுவதியை பொலன்னறுவை மாவட்ட மோசடி தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான இந்த யுவதி சுமார் 5 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் மாவட்ட மோசடி தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யுவதியுடன் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த அவரது கணவர் மற்றும் சகோதரனையும் பின்னர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு இவர்கள் குறித்து தகவல் கிடைத்திருந்ததுடன் ஒற்றர் ஒருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்படும் போது இவர்களிடம் இருந்து 4.560 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கணவன் மற்றும் சகோதரன் ஆகியோர் கொழும்பில் 500 ரூபாவுக்கு கொள்வனவு செய்யும் ஹெரோயின் பக்கட் ஒன்றை பொலன்னறுவையில் 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர்.

வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புக்கு அமைய யுவதி மோட்டார் சைக்களில் சென்று ஹெரோயின் விற்பனை செய்து வந்துள்ளார்.

அவருக்கு ஒரு பெக்கட் ஹெரோயினை பெற்றுக்கொடுக்கும் இளைஞர்கள் எவராக இருந்தாலும் அவர்களுடன் யுவதி பாலியல் ரீதியாக இணை சந்தர்ப்பம் வழங்கி வந்துள்ளதாக பொலிஸாருக்கு தெரியவந்துள்ளது.

இந்த யுவதி இதற்கு முன்னர் விமானப் படை சிப்பாய் ஒருவரை திருமணம் செய்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.