அனுமதிப் பத்திரமின்றி மண் ஏற்றிச் சென்றவருக்கு 30,000 ரூபா தண்டப்பணம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சிப் பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச்சென்றவருக்கு 30,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போதே நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் 30,000 ரூபா தண்டப்பணம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.