மதுபானத்துடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு 18 ஆயிரம் ரூபா தண்டப்பணம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேருக்கு கிளிநொச்சி மாவட்ட நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் 18,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப் பகுதியில் 200 மில்லிலீற்றர் கசிப்பினை உடமையில் வைத்திருந்த ஒருவரை கைது செய்த கிளிநொச்சிப் பொலிசார் குறித்த நபரை நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

இதனையடுத்து குறித்த நபருக்கு 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஒருபோத்தல் கசிப்புடன் கைது செய்யப்பட்ட நபருக்கு 8,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.