மது போதையில் வாகனம் செலுத்தியவரின் சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பளை பகுதியில் மதுபோதையில் அதிவேகமாக வாகனம் செலுத்தியவருக்கு 12,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாத காலத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பளை பகுதியில் மதுபோதையுடன் அதிக வேகத்தில் லொறியை செலுத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று அவரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்தே நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா இந்த உத்தரவினை பிறப்பித்திருந்தார்.