புத்தளம், இலவங்குளம் பாதையிலுள்ள பாலங்களை அமைக்க மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி

Report Print Gokulan Gokulan in சமூகம்

புத்தளத்திலிருந்து, இலவங்குளம் வழியாக மன்னார் பாதையை மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்தும் வகையில் அந்தப் பாதையிலுள்ள 4 பாலங்களை புனரமைப்பதற்கு மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற போதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது புத்தளத்திலிருந்து, இலவங்குளம் வழியாக இருமருங்கிலும் துப்பரவுப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், மன்னார் உப்பாறு வரை இந்தத் துப்பரவுப் பணிகளை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

இதன்போது அமைச்சர் றிஷாட் பதியுதீன் கொண்டு வந்த யோசனையை ஏற்றுக் கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் இது தொடர்பாக மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை ஒப்படைத்தது.

இந்தக்கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தின் நீர்ப்பிரச்சினை, காணிப்பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர்களானசெல்வம் அடைக்கலநாதன், காதர் மஸ்தான், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், மன்னார் மாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.