முன்பள்ளி மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

பாரதி முன்பள்ளி முகாமைத்துவ குழுவினர் வீ-3 அமைப்பிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க குறித்த கற்றல் உபகரணங்கள் கொண்ட பொதிகள் கொக்குவிலைச் சேர்ந்த லண்டன் வாழ் வீ -3 அமைப்பின் சமூக ஆர்வலர் வி.விமல்ராஜால் அரவது மனைவியின் மூலம் வழங்கி வைக்கப்பட்டது.

பாரதி முன்பள்ளி ஆசிரியர் ச. மேரி மெற்றில்டா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீநிவாஸன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற அதிபர் குருகுலசிங்கம் மாவட்ட சமூக சேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. கலைவாணி, வீ-3 அமைப்பின் வவுனியா உறுப்பினர்கள் கே.உதயகுமார், எஸ்.புருசோத்தமன், சமூக ஆர்வலர் த. தர்மராஜா உட்பட முன்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.