“சீனி இன்றி சுவைப்போம்” மன்னாரில் விழிப்புணர்வு கண்காட்சி

Report Print Ashik in சமூகம்

தேசிய போஷாக்கு மாதத்தை முன்னிட்டு 'சீனி இன்றி சுவைப்போம்' எனும் கருப் பொருளில் மன்னாரில் கண்காட்சி நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

மன்னார் மாவட்டம் முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த கண்காட்சியை முசலி பிரதேசச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், தாய்மார்கள், பாலர் பாடசாலை சிறுவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் குறித்த கண்காட்சியில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.