வவுனியாவில் 122 ஆவது அறநெறி பாடசாலை தின விழா

Report Print Theesan in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழிகாட்டலின் கீழ் 122 ஆவது அறநெறி பாடசாலைகள் தினத்தை நினைவு கூரும் விழா வவுனியாவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் வவுனியா நகர கேட்போர் கூட மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பௌத்த சாசன பிரதி அமைச்சர் எச். ஆர். சாரதி துஸ்மந்த மித்திரிபால, பௌத்த மத அலுவல்கள் ஆணையாளர் நாயகம் நிமல் கொட்டவலகெதர, பௌத்த சாசன வலிமுரியாவே குசலதம்ம தேரர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிரகுமார, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.ஆர்.றோகனபுஷ்பகுமார, முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.கேதீஸ்வரன், வட மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜெயதிலக, வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், வவுனியா மாவட்ட சாசனாரக்ஷக அலுவலகர்கள், பாடசாலை அதிபர், மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், பாடசாலை மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.