வவுனியாவில் மாபெரும் சிரமதானப் பணி

Report Print Theesan in சமூகம்

டெங்கு நோய் தாக்கத்தினை தடுக்கும் வகையில் வவுனியா நகர பகுதியை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வவுனியா மத்திய பேருந்து நிலையம் மற்றும் நகர மத்தியிலிலுள்ள வர்த்தக நிலையங்களில் முன்பாகவுள்ள இடங்களை சுத்தம் செய்யும் பணி இடம்பெற்றன.

அத்துடன், வவுனியா பொலிஸார், வர்த்தகர்கள் மற்றும் நகர சபையினர் இணைந்து மேற்கொண்ட டெங்கு ஒழிப்பு சிரமதான பணியில் சுமார் 40 இற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், நாட்டில் பல இடங்களில் டெங்கு நோய் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் இவர்களின் நடவடிக்கை முன்மாதிரியாக அமைந்துள்ளதாக பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.