காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பு மூலம் கற்றல் கூடம் திறந்து வைப்பு

Report Print Reeron Reeron in சமூகம்

மட்டக்களப்பு - வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி புதூர் கிராமத்தில் வசிக்கும் சிறுவர்களின் நலன் கருதி காந்தள் கற்றல் கூடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

காந்தள் புலம்பெயர் இளையோர் அமைப்பின் நிதியுதவியுடன் குறித்த கற்றல் கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கதிரவெளி புதூர் கிராமத்தில் மீன்பிடித்தல், வீதியோரங்களில் கல்பொறுக்குதல், தூண்டில் போடுதல், பொன்னாங்கேணி மற்றும் திராய்பிடிங்கி விற்று அன்றாட உணவுக்கு பெரும்பாடும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற அதிக்குடிவாசிகள் என அழைக்கப்படும் சுமார் 35 இற்கு மேற்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளின் அடிப்படைக் கல்வியை மையாமாகக் கொண்டு காந்தள் கற்றல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணம் தொடக்கம் நாடாளுமன்றம் வரை தொடர்பில் மக்களின் வாக்குகளைப் பெற்று அதிசொகுசு வாகனங்களில் அபிவிருத்திக்குழு அமர்வு என வாய்ப்பேச்சோடு மாதாந்தம் ஏறியிரங்கும் அரசியல்வாதிகள் ஒருபுறமிருக்க தங்கள் சமூகத்தின் தேவை கருதிய புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தின் சமூக நலன் திட்டங்கள் ஒருபுறம் இவ்வாறான மக்களின் எதிர்கால பிள்ளைகளின் கல்விக்குரிய கற்றல் நிலையங்களை இனங்கண்டு திறந்து வைத்துள்ளனர்.

தேன்கூடு அமுல்படுத்தலின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு ஆலய குருமார்கள் உட்பட தேன்கூடு தா.குகதாசன், மட்டக்களப்பு மாவட்ட சமூக வி.செல்வநாயகம், எஸ்.விஜயராஜன் கிராம, புதூர் கிராமத் தலைவர் எஸ்.புஸ்பன் மற்றும் காந்தள் கற்றல் கூடத்தில் கற்கும் 30 மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், கடந்த காலங்களில் இருந்து காந்தள் புலம்பெயர்ந்தோர் இளையோர் அமைப்பு மற்றும் தேன்கூடு ஆகியன இணைந்து மாணவர்களின் கல்விக்குரிய செயற்திட்டங்கள், பரீட்சைக்கு வழிகாட்டி மற்றும் உயர் படிப்புக்கான மாணவர்களுக்குரிய ஊக்குவிற்பு கொடுப்பனவுகள் என பல்வேறுபட்ட கல்விசார் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர் என அதன் தலைவர் இதன்போது