3 வயதுடைய சிறுவன் பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து பலி

Report Print Evlina in சமூகம்

நொச்சியாகம - போகஹவேவ பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயதுடைய சிறுவன் ஒருவன் 15 அடி ஆழமுடைய பாதுகாப்பற்ற கிணறு ஒன்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பேஷல இதுரங்க எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவனும் அவனது தாயும், வீட்டின் அருகாமையில் உள்ள மரம் ஒன்றின் கீழ் உறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சிறுவனை காணாமல் சிறுவனின் சகோதரனும், அயலவர்களும் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கிணற்றில் சிறுவன் வீழ்ந்துள்ளதைக்கண்டு அயலவர்களின் உதவியுடன் மீட்டு நொச்சியாகமை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இருப்பினும், சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.