தெரு நாயின் உயிரை காப்பாற்ற 80 ஆயிரம் ரூபா செலவிட்ட இளைஞன்

Report Print Vethu Vethu in சமூகம்

நோயினால் பாதிக்கப்பட்ட தெரு நாய் ஒன்றை காப்பாற்றுவதற்கு இளைஞர் ஒருவர் 80 ஆயிரம் ரூபா பணம் செலவிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த கிஹான் தினுஷ்க என்ற இளைஞரே இந்த சேவையை செய்துள்ளார்.

அந்த நாயின் வாய் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாயினை காப்பாற்றுவதற்காக 80 ஆயிரம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து இந்த நாயை காப்பாற்றியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் கிஹான் தினுஷ்க பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

நாயை சிகிச்சைக்காக கண்டிக்கு கொண்டு சென்ற போது வைத்தியர்கள் விடுமுறை என்று கூறினார்கள். குருணாகலில் தற்போது அதனை காப்பாற்றுவது கடினம் என்று கூறினார்கள்.

கொழும்பில் கொலை செய்வதற்கு தடுப்பூசி வழங்குவதாக கூறினார்கள். தெரு நாய் ஒன்றுக்கு சிலர் 80 ஆயிரம் ரூபா செலவிட பைத்தியமா என கேட்டார்கள்.

பலரின் முரண்பாடுகளுக்கு மத்தியில் அந்த நாயின் வாழ்க்கையை மாற்றியுள்ளோம். நாளைய நாள் குறித்து நம்பிக்கை இல்லை. இன்றைய தினம் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

சிறிய உயிரை காப்பாற்ற உதவிய அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.