சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையில் மாற்றம்?

Report Print Kamel Kamel in சமூகம்

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையில் மாற்றம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

சீருடையில் மாற்றம் செய்வது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன.

இதற்கென சிறைச்சாலை திணைக்களம் குழுவொன்றை நியமித்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடைகளை மாற்றுவது குறித்து ஆராய்வதற்காக சகல உத்தியோகத்தர்களிடமும் வினாக்கொத்து வழங்கப்பட்டு கருத்துக்கள் கேட்டறியப்படவுள்ளன.

இதன்படி எதிர்வரும் வாரங்களில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் சீருடையில் மாற்றம் செய்வதா, இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

Latest Offers