அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு:நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு

Report Print Kamel Kamel in சமூகம்

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட ஏனைய அரசாங்க வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டனவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதனால் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் நோயாளிகளை சூறையாடி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இலவச மருத்துவ சேவை சிறப்பாக நடைபெறுகின்றது என்பதனை பிரச்சாரம் செய்யும் நோக்கில் பாரியளவில் செலவிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்படுவதில்லை எனவும் அருகாமையில் இருக்கும் தனியார் மருத்துவ ஆய்வுகூடங்களில் பரிசோதனை செய்து கொண்டு வருமாறு நோயாளிகள் பணிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சுகாதார அமைச்சர் பிரச்சாரம் செய்வதனைப் போன்று சிறந்த சேவை நாட்டில் கிடையாது என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது

Latest Offers