பொலிஸ் நடமாடும் சேவையின் இறுதி நாள் இசை நிகழ்வுகள்

Report Print Mohan Mohan in சமூகம்

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கு அமைய ஒருமாத காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த பொலிஸ் நடமாடும் சேவை நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.

குறித்த நடமாடும் சேவையின் நிறைவு நாளை முன்னிட்டு நேற்றைய தினம் முல்லைத்தீவு, மணற்குடியிருப்பு கடற்கரையில் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.

குமுழமுனை கிழக்கு, மத்தி மற்றும் மேற்கு போன்ற இடங்களை உள்ளடக்கி குறித்த பொலிஸ் நடமாடும் சேவை இடம்பெற்றது.

இந்த நடமாடும் சேவையின் மூலமாக வீதி அபிவிருத்தி, வணக்கத் தலங்கள் புனரமைத்தல், சிரமதானம், சுகாதார விழிப்புணர்வு, போன்ற சேவைகளை சிறந்த முறையில் வழங்கியுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.