சட்டவிரோத மரம் ஏற்றி சென்ற வாகனம் விபத்து

Report Print Navoj in சமூகம்

சட்டவிரோத மரங்களை ஏற்றி சென்ற வாகனம் கிரான் பாலத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், செங்கலடி மணலாறு பகுதியில் இருந்து சட்டவிரோத மரங்களை கிரான் பகுதியினூடாக ஓட்டமாவடிக்கு கொண்டு சென்ற வழியில் புலிபாய்ந்தகல் பகுதியில் வைத்து வாழைச்சேனை வன இலாகா அதிகாரிகள் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன் போது அவர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக வேகமாக சென்ற வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து கிரான் பாலத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பத்து அடி தொடக்கம் பன்னிரெண்டு அடி நீளம் கொண்ட முப்பதிற்கு மேற்பட்ட தேக்கு மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், வாகனமும் சுற்றிவளைத்துள்ளதாகவும், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இந்த பகுதியில் சட்டவிரோத மரம் வெட்டும் பணி இடம்பெறுவதால் வன இலாகா அதிகாரிகள் இந்த பகுதியில் கடமையில் ஈடுபடுவதாகவும் வாழைச்சேனை வன இலாகா வட்டார அதிகாரி எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.