நில்வள கங்கையில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை!

Report Print Steephen Steephen in சமூகம்

மாத்தறை - மாஹநாம பாலத்தில் இருந்து நில்வள கங்கையில் குதித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த நபர் நேற்றிரவு நில்வள கங்கையில் குதித்துள்ளதுடன், சடலத்தை தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என தெரியவந்துள்ளது.

பொலிஸார், கடற்படையின் சுழியோடிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தற்கொலை செய்து கொண்டவரின் சடலத்தை தேடி வருகின்றனர்.

ஹக்மனை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.