முல்லைத்தீவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலமெஹெவர நிகழ்ச்சித் திட்டம்

Report Print Mohan Mohan in சமூகம்

உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலமெஹெவர நடமாடும் சேவை நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய குறித்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்ற குறித்த நடமாடும் சேவையில், தமக்கான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவென அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவிலான பொதுமக்கள் பிரதேச செயலகத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

அத்தோடு இன்று பிற்பகல் வரை இந்த நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டம் இடம்பெறும் என கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் குணபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நடமாடும் சேவையின் போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Offers