வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Report Print Theesan in சமூகம்

வவுனியா பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் இன்று காலை 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட 230 கிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து இவ்வாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் ஜோசப் மைக்கல் திருகோணமலையைச் சேர்ந்த 48 வயதுடையவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும், விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.