அடையாளம் தெரியாத நபர்களால் மீனவர்களின் வலைகளுக்கு தீ வைப்பு

Report Print Kari in சமூகம்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள கடற்தொழிலாளர்களின் 20 லட்சம் பெறுமதியான வலைகள் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலங்களாக குறித்த பகுதியில் உள்ள மீனவர்களுக்கு இடையில் பல முரண்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் இவ்வாறு மீனவர்களின் வலைக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers