மருத்துவப் பீட மாணவர் ரயன் ஜயலத் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in சமூகம்

மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 30ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ரயன் ஜயலத் தனது சட்டத்தரணிகள் ஊடாக அண்மையில் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றத்தில் நேர்நிலையாகவில்லை என்பதால், ரயன் ஜயலத் உட்பட 5 மாணவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி பிடியாணை பிறப்பித்திருந்தது.

சுகாதார அமைச்சுக்குள் பலவந்தமாக புகுந்து அங்கிருந்த அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக இவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.