வித்தியா படுகொலை வழக்கு! சந்தேகநபர்களிடம் குறுக்கு விசாரணைகள் ஆரம்பம்

Report Print Sumi in சமூகம்

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களிடம் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் குறுக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வித்தியா படுகொலை வழக்கு தற்போது ட்ரயல் அட்பார் முறையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில், மேல் நீதிமன்ற நீதிபதிகளான அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று காலை 9.00 மணிக்கு யாழ். மேல் நீதிமன்றின் மூன்றாம் மாடியில் விசாரணைகள் ஆரம்பமாகியது. இதன் போது 9 சந்தேகநபர்களும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடமும் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முதல் மூன்று சந்தேகநபர்களிடமும் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது நான்காவது சந்தேகநபரிடம் குறுக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.