தன் தாய் வாழ்ந்த இடத்தை இலவசமாக வழங்கிய முதலமைச்சர்! கண்ணீருடன் உரை

Report Print Shalini in சமூகம்

தனது தாய் வாழ்ந்த இடத்தில் அமைக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றும் போது முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கண்கலங்கியுள்ளார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தன் தாய் வாழ்ந்த இடத்தை இலவசமாக வழங்கி அதில் அமைக்கப்பட்டுள்ள ஆடைத்தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு தொழில்வாய்ப்புக்களை வழங்கியுள்ளார்.

இந்த ஆடைத் தொழிற்சாலையில் தமிழ், முஸ்லிம் பெண்களுக்கு இன, மத பாகுபாடின்றி தொழில்வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த ஆடைத் தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றுகையில் தனக்கு ஆறு வயதாக இருக்கும் போது இறையடி சேர்ந்த தாயை எண்ணி கிழக்கு முதல்வர் மேடையில் கண்கலங்கினார்.

இதன்போது அங்கிருந்தவர்களும், மதத்தலைவர்களும் மௌனமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.