முள்ளியவளையின் உள்ளக வீதிகள் திருத்தம் செய்யப்படவில்லை: மக்கள் விசனம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பகுதியிலுள்ள உள்ளக வீதிகள் திருத்தம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

முள்ளியவளை முதலாம் மற்றும் இரண்டாம் வட்டாரம் பகுதிகளைச் சேர்ந்த வீதிகளே இவ்வாறு திருத்தம் செய்யப்படாமல் காணப்படுகின்றது.

இது தொடர்பில் முள்ளியவளை பிரதேச சபையிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இதேவேளை, குறித்த வீதிகள் சுமார் 45 வருடங்களுக்கு மேலாக செப்பனிடப்படாமல் இருப்பதால் அங்கு காணப்படும் மதகுகளும் உடைந்துள்ளதுடன் வீதியின் நடுவில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனத்திற் கொண்டு வீதிகளை செப்பனிட்டுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest Offers