இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்களிடம் அன்பான வேண்டுகோள்

Report Print Steephen Steephen in சமூகம்

கண்டி - பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த சம்பவம் போன்ற சம்பவங்கள் இலங்கையில் நடக்கக் கூடாது என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கனிய வள அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் தோல்வியடையும் போது நாம் இந்தியாவின் நிலைமைகளுக்கு செல்லக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி தோல்வியை சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கலாச்சார வரலாற்றை கொண்ட நாட்டினரான இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களின் மனநிலை குறித்தும் எப்போதும் சிந்திக்க வேண்டும்.

கிரிக்கெட் வீரர்களை அவமதிக்க வேண்டாம் என மக்களிடம் அன்பாக கேட்டுக்கொள்கிறேன். அவமதிக்க வேண்டுமாயின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினரை அவமதியுங்கள் என கேட்டுக் கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.