வடக்கில் வாள்வெட்டு சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி! பொலிஸ்மா அதிபர்

Report Print Murali Murali in சமூகம்

வடக்கில் இடம்பெற்று வந்த வாள்வெட்டுச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்காக தான் நேரடியாக களத்தில் இறங்கிச் செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது நிறைவை முன்னிட்டு பதுளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், வடக்கில் அண்மைக் காலங்களில் பல வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று வந்தன. இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக நான் யாழ்ப்பாணத்திற்கு நேரடி விஜயம் மேற்கொண்டேன்.

அங்கு நேரடியாக பொது மக்களையும், மக்கள் பிரதிநிதிகளையும் சந்தித்தேன். அதன் பிறகு விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆவாக் குழுவினர் உட்பட வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய அனைத்துக் குழுக்களையும் கைது செய்து நிலமையை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது சிறையில் இருக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers