கிழக்கு மாகாண கஞ்சா விற்பனையின் முக்கிய சூத்திரதாரிகள் கைது

Report Print Navoj in சமூகம்

கிழக்கு மாகாணத்திற்கான கேரள கஞ்சா விற்பனையின் முக்கிய சூத்திரதாரிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

கஞ்சாவை வாங்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸார் குறித்த நபர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கஞ்சாவை ஓட்டமாவடி நாவலடி பிரதேசத்திற்கு எடுத்து வருமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து இரண்டு கிலோ கேரள கஞ்சாவை எடுத்து வந்த இருவரை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் திருகோணமலையை சேர்ந்தவர் என்றும் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி ரி.மேனன் தெரிவித்துள்ளார்.

இச்சந்தேகநபர்கள் மிக நீண்ட நாட்களாக இப்பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என்று இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே மேற்படி சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் தொடர்புபட்ட இன்னும் பலர் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

Latest Offers