20ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஒரே நாளில் 5 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

Report Print Steephen Steephen in சமூகம்

மாகாண சபைத் தேர்தலை ஒரே தினத்தில் நடத்துவதற்காக கொண்டு வரப்படவுள்ள 20வது திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்பதால், விசேட சட்ட விளக்கத்தை வழங்குமாறு கோரி 5 மனுக்கள் இன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி, மக்கள் ஐக்கிய முன்னணியின் செயலாளர் திஸ்ஸ காமினி அபேசிங்க ஜயவர்தன யாப்பா, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் ஆகிய தரப்பினர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுக்களில் சட்டமா அதிபர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

Latest Offers