யாழ். வடமராட்சியில் வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

Report Print Suman Suman in சமூகம்

யாழ். வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேசத்தில் வேடிக்கை பார்க்க சென்ற இடத்தில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்றைய தினம் (28) இடம்பெற்றுள்ளதுடன், படுகாயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மூன்று நாட்களாக யானை ஒன்று மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், வேடிக்கை பார்க்க சென்ற மூவர் மீது இன்று யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுள்ளார்.

மேலும், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். நீண்ட போராட்டத்தின் மத்தியில் உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யானையை பிடிப்பதற்கான முயற்சியில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நீண்ட நேரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த, பகுதிக்கு பொதுமக்களை செல்ல வேண்டாம் என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தினரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன், மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் வருகை தந்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.