காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஊர்வலமும் பொதுக்கூட்டமும்

Report Print Thileepan Thileepan in சமூகம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தினை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் ஊர்வலமும் பொதுக்கூட்டமும் இடம்பெறவுள்ளதாக குறித்த அமைப்பின் இணைப்பாளர் து. தேவராசா தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிகழ்வு, அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், நகர மத்தியில் இருந்து ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு, வவுனியா நகரசபை மண்டபத்தினை வந்தடைந்த பின்னர் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.