கிளிநொச்சியில் இரு பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சியில் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இரண்டு பிரதேச செயலாளர்களுக்கும் தொலைநகல் மூலம் இன்று (28) பிற்பகல் இடமாற்றம் கடிதம் அனுப்பட்டுள்ளது.

கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் ஆகியோருக்கே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கரைச்சி பிரதேச செயலாளர் கோ. நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.