வவுனியாவில் யுரேனஸ் இளைஞர் கழகம் நடத்திய மாபெரும் கலை விருது விழா

Report Print Theesan in சமூகம்

வவுனியா - சமளங்குளம் யுரேனஸ் இளைஞர் கழகம் நடத்திய மாபெரும் கலை விருது விழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, சமளங்குளம் கல்லுமலை விநாயகர் ஆலய முன்றலில் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு, 20வருடங்களின் பின்னர் நடைபெறுவதுடன், இதில் பங்கு பற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு தொடர்பாக கழகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

இது கலைஞர்களுக்கான களம் இதன் கதவை நாங்கள் திறந்து விட்டிருக்கின்றோம். அதனை நீங்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

அதுமட்டும் இன்றி வெறுமனவே வாய்பேச்சு அல்ல கலைஞர்களின் உள்ளத்தில் உள்ளவை புரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்ச்சிக்காக இரவு பகலாக பாடுபட்ட இளைஞர் கழக உறுப்பினர்களான பிரேம்குமார், நிரோஷன், தனுஷன், கஜன், கிருசாந், திலக்சன் ஆகியோருக்கு அக்கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.