யாழில் பிரபல பாடசாலையின் மாணவன் கைது

Report Print Thamilin Tholan in சமூகம்

யாழ். சங்குவேலிப் பகுதியில் கஞ்சா கலந்த மாவா பாக்கினைத் தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிற்காக பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனை இன்று காலை கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து குறித்த மாணவனிடம் பொலிஸார் சோதனை செய்துள்ளனர். இதன்போது கஞ்சா கலந்த மாவா பாக்கு வைத்திருந்தமைக்காக தரம் - 10 இல் கல்வி கற்கும் மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.