யாழ். பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுக் காதலன் தப்பியோட்டம்

Report Print Thayalan Thayalan in சமூகம்
யாழ். பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுக் காதலன் தப்பியோட்டம்

பொலிஸாரைக் கண்டதும் காதலியைக் கைவிட்டுத் காதலன் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இச் சம்பவம் இன்று காலை பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்றுக் காலை முதல் தமது பிள்ளையைக் காணவில்லை என பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

குறித்த 14 வயதுடைய சிறுமி 19 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகவும் குறித்த இருவரும் கற்கோவளம் பகுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து இன்று காலை குறித்த பகுதிக்குப் பொலிஸார் சென்றுள்ளனர்.

வீடொன்றில் தங்கியிருந்த இளைஞன் பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளான்.

சிறுமியைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற பொலிஸார் இளைஞனைத் தேடியுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞன் இன்று பிற்பகல் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.