நிஜத்தை பிரதிபலித்த ஒத்திகை நிகழ்வு!

Report Print Rusath in சமூகம்

வீதி விபத்துக்களின் போது அதனை வைத்தியசாலை எவ்வாறு முகாமை செய்து கொள்வது என்பது தொடர்பான ஒத்திகை முன்னோட்ட நிகழ்வு ஒன்று இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது களுதாவளை மகா வித்தியாலயத்திற்கு முன்னால் கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் இடம்பெற்றது.

விபத்து ஒன்று இடம்பெற்றால் அதில் பாதிக்கப்பட்டவர்கள், காயமுற்றவர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டடோர் வைத்தியசாலையில் எவ்வாறு முகாமை செய்து நடாத்தப்பட வேண்டும் என்ற ஒத்தியையே இதன்போது இடம்பெற்றது.


விபத்தில் காயப்பட்டவர்களை மீட்பது, நோய்காவு வண்டியில் எவ்வாறு கொண்டு செல்வது, வைத்தியசாலையில் பாதிக்கப்பட்டவர்களை பராமரிப்பது, பதிவுகளை மேற்கொள்ளவது, உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது ஒத்திகை பார்க்கப்பட்டன.

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது.

வைத்தியசாலையின் அனர்த்த பாதுகாப்பு பிரிவினர், பொதுமக்கள், களுவாஞ்சிக்குடி போக்குவரத்துப் பொலிஸார், களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், என பலரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.