பலுசிஸ்தான் மக்களுக்கு ஈழத்தமிழர்களின் தோழமை : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

Report Print Dias Dias in சமூகம்

பாகிஸ்தானில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி பெரும் மனித உரிமை மீறல்களை சந்தித்து வருகின்ற பலுசிஸ்தான் மக்களுக்கு ஈழத்தமிழ் மக்களின் ஆதரவினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிக்காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான், கசகஸ்தான் போல பலுசிஸ்தானும் அப் பிராந்தியாத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற நிலையில் அப்பகுதியினை பாகிஸ்தான் நீண்டகாலமாக ஆக்கிரமித்து வருகின்றது.

பலுசிஸ்தான் மக்கள் மீதான பாகிஸ்தான் இராணுவத்தினரது பாரிய மனித உரிமை மீறல்களை அனைத்துலக அரங்கில் வெளிக்காட்டும் வகையில் ஐ.நா மனித உரிமைச்சபையில் பல பக்க நிகழ்வுகளை பலுசிஸ்தான் அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தம்மீதான மனித உரிமை மீறல்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் எனக் கோரும் பலுசிஸ்தான் அமைப்பினர், தம்மை ஒரு தனித்த அலகாக அனைத்துலக சமூகம் அங்கீகரிக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

இந்நிலையில், தற்போது இடம்பெற்று வருகின்ற ஜெனீவா ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் போது பலுசிஸ்தான் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் ஈழத்தமிழ் மக்களது தோழமையினை பலுசிஸ்தான் மக்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ளது.

தெற்காசியாவில் மனித உரிமை மீறல்கள் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்த இந்த நிகழ்வில் ஈழத்தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட இலங்கை அரச கட்டமைப்பின் அநீதிகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் மணிவண்ணன் பேச்சாளராக பங்கெடுத்து கருத்துரையினை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.