பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விழுந்த யானை குடும்பம்

Report Print Steephen Steephen in சமூகம்

ஹொரவபொத்தனை, தேகேதிபொத்தனை, கரதகஸ்வெவ கிராமத்தில் சேனை பயிர் நிலத்தில் உள்ள பாதுகாப்பற்ற பாசன கிணற்றுக்குள் விழுந்த நான்கு யானைகளை பாதுகாப்பாக மீட்டதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த யானைகள் மூன்று தினங்களாக கிணற்றுக்குள் இருந்துள்ளன. அதனை பார்த்த நில உரிமையாளர் உடனடியாக ஹொரவபொத்தனை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் கிணற்றுக்குள் விழுந்த யானைகளை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

சுமார் 35 வயதான ஆண் யானை, 30 வயது மதிக்கத்தக்க பெண் யானை, மூன்று வயதான மற்றும் ஆறு மாதமான குட்டி யானைகள் இவ்வாறு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.