வவுனியாவில் பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபம் திறந்து வைப்பு

Report Print Theesan in சமூகம்

பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபத்தின் திறப்பு விழா இன்று காலை வவுனியா, கற்குழியில் இடம்பெற்றுள்ளது.

ஆசியாவிற்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதம இயக்குனர் நிர்மலா கஜாரியா கலந்துகொண்டு குறித்த தியான மண்டபத்தினை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.

இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாய பணிப்பாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இந்த மண்டபத்தில் மன ஆற்றுப்படுத்தும் தியானங்கள் தினமும் காலை, மாலை என இலவசமாக இடம்பெறுவதுடன் இன, மத, சமய கலாச்சார வேறுபாடின்றி தியான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.