மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா கொலை வழக்கு! சாட்சி விசாரணைகள் ஒக்டோபரில்

Report Print Steephen Steephen in சமூகம்

தற்கொலை குண்டு தாக்குதலில் மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரா உட்பட 31 கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஒக்டோபர் 3ஆம் திகதி நடத்துமாறு அனுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அன்றைய தினம் வரை பிரதான சந்தேகநபரான உமர் ஹபிதாப் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் ஜானக்க பெரேரா உள்ளிட்ட 31 பேர் கொல்லப்பட்டனர்.

சம்பவத்தின் சாட்சியாளர்களாக 152 பேர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.