குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ள 15 பெண்கள்

Report Print Gokulan Gokulan in சமூகம்

பொகவந்தலாவ, லொயினோன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 தொழிலாளர்கள் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் தேயிலை பறித்துக்கொண்டிருந்த வேளையில் 15 பெண் தொழிலாளர்கள் இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 15 பேரும் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் 9 பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

எனினும் எஞ்சிய அறுவரும் தொடர்ந்து சிகிச்சைப்பெற்று வருவதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.