3.8 மில்லியன் ரூபாவில் புனரமைக்கப்படும் கிளிநொச்சி, மலையாளபுரம் வேற்பிள்ளையார் வீதி

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி, கிருஸ்ணபுரம், மலையாளபுரம் வேற்பிள்ளையார் வீதி, 3.8 மில்லியன் ரூபா செலவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

1,200 மீற்றர் நீளமான வீதி இதன் மூலமாக புனரமைக்கப்பட்டுவருகின்றது.

கிளிநொச்சி, பாரதிபுரம், மலையாளபுரம், கிருஸ்ணபுரம் ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்து தேவைகளுக்குரிய பிரதான வீதிகளில் ஒன்றாகக் காணப்படும் வேற்பிள்ளை கோவில் வீதியை புனரமைத்துத் தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் குறித்த வீதி நிரந்தர வீதியாக புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், குறித்த வீதியின் புனரமைப்புப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளதோடு, புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.