கிளிநொச்சி மற்றும் மன்னாரில் இன்று மின்தடை

Report Print Thamilin Tholan in சமூகம்

கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின்சார தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சியின் கெளதாரிமுனைப் பகுதியிலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார் மாவட்டத்தின் நாகதாழ்வு பகுதியிலும் மின்சாரம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.